சாங்கி விமான நிலையம் அருகே பணிப்பெண்ணை தாக்கிய கோல்ஃப் பந்து..!

Changi Airport Golf ball injury
(Photo: Derek Yap/ FB)

சாங்கி ஜுராசிக் மைல் (Changi Jurassic Mile) பாதைக்குள், கோல்ஃப் பந்துகளால் ஏற்படும் அபாயத்தை மேலும் குறைப்பதற்காக வலைகளை அமைப்பது போன்ற கூடுதல் வழிகளை சாங்கி விமான நிலையக் குழு (CAG) கவனித்து வருவதாக நேற்று (அக். 23) தெரிவித்துள்ளது.

அந்த நடைபாதையில் கோல்ஃப் (Golf) பந்து ஒன்று பறந்து வந்து பணிப்பெண் ஒருவரை தாக்கியதை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : லிட்டில் இந்தியாவில் ஆயுதத்தை கொண்டு முதுகில் தாக்கிய சந்தேகத்தில் இளைஞர் கைது..!

சாங்கி ஜுராசிக் மைல் என்பது டைனோசர் உருவங்கள் கொண்ட நிரந்தர வெளிப்புற காட்சி ஆகும்.

இது சாங்கி விமான நிலைய இணைப்புடன், விமான நிலையத்தையும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவையும் இணைக்கிறது.

கடந்த வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட பணிப்பெண் அந்த பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அருகிலுள்ள தானா மேரா கன்ட்ரி கிளப்பில் (Tanah Merah Country Club) இருந்து கோல்ஃப் பந்து பறந்து வந்து தாக்கியதாக ஒருவரின் பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

ஜுராசிக் மைலில் இதற்கு முன்பு இது போன்று நடந்தது இல்லை, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு சாங்கி விமான நிலையக் குழு (CAG) வருத்தம் தெரிவித்துள்ளது.

மேலும், அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது, அவரது நிலையை சரிபார்க்க CAG குடும்பத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

இதையும் படிங்க : சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நான்கு பெண்களின் சண்டை….மூன்று பேர் கைது..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…