சீனா கொரோனா வைரஸ் (COVID-19) இன்றைய நிலவரம்..!

China coronavirus death
China coronavirus death toll surpasses 1,700; decline in new cases outside Hubei (Photo: China Daily via REUTERS)

சீனாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,770 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி மேலும் 105 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய சுகாதார ஆணையம் திங்கள்கிழமை இன்று (பிப்ரவரி 17) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID -19; சிங்கப்பூரில் ஆயுதப்படை வீரர் உட்பட மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று உறுதி..!

மேலும் நாடு முழுவதும் 70,500-க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹூபேயிலும் அதன் தலைநகரான வூஹானிலும் சுமார் 56 மில்லியன் மக்களை, சீன அதிகாரிகள் தனிமைப்படுத்தலில் வைத்துள்ளனர்.

மத்திய மாகாணத்திற்கு வெளியே 115 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று ஆணையம் தெரிவித்துள்ளது, இது ஒரு வாரத்திற்கு முன்பு 450ஆக இருந்ததைவிடக் குறைவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19; நாம் தயாராக இருக்கவேண்டும் – சிங்கப்பூர் அரசு..!

சீனாவுக்கு வெளியே மிகப்பெரிய அளவில் பாதிப்பு குறித்த விவரங்களின் அடிப்படையில், ஜப்பானுக்கு வெளியே ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில், அதிகாரி உட்பட 356 பேருக்கு நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் கோவிட் -19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) தெரிவித்துள்ளது.