சீனா (COVID-19) கொரோனா வைரஸ்; அண்மை நிலவரம் என்ன..?

COVID-19
China COVID-19 toll leaps past 1,600 as new cases slow . (Photo: Chinatopix via AP)

சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) இன்றைய நிலவரப்படி, தொடர்ந்து மூன்றாவது நாளாகக் குறைந்துள்ளது.

சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் கடந்த டிசம்பரில் முதன்முதலில் இந்த வைரஸ் பரவியது, ஆசியாவிற்கு வெளியே முதல் மரணம் இந்த வாரத்தில் பிரான்சில் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19; புதிய 5 நபர்களை உறுதிப்படுத்தியது சிங்கப்பூர் – மேலும் 1 குணமடைந்துள்ளார்..!

சீனாவின் பிரதான நிலப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 1,665 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை 68,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் COVID-19 சம்பவத்தில் பாதிக்கப்படும் புதிய நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹூபேயில், புதிய சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து, 139 ஆக உள்ளது.

மேலும், நாட்டின் பிற பகுதிகளில் புதிய சம்பவங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வரும் முஸ்லிம்களுக்கு ஆலோசனை..!