சீனாவில் கொரோனா வைரஸால் 6 சுகாதார ஊழியர்கள் உயிரிழப்பு; 1,716 பேர் பாதிப்பு..!

China says 6 health workers died
China says 6 health workers died from coronavirus, 1,716 infected (Photo: China Daily via REUTERS)

சீனாவில் புதிய கொரோனா வைரஸால் 6 சுகாதார ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் 1,700 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இன்று (பிப்ரவரி 14) தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அந்நாட்டில் 1,716 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யிக்சின் (Zeng Yixin) தெரிவித்தார்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (COVID-19); சீனாவின் இன்றைய நிலவரம் – 5,000க்கும் மேற்பட்ட புதிய சம்பவங்கள் பதிவு..!

பெரும்பான்மையான 1,102 பேர் மத்திய நகரமான வூஹானில் இந்த COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜெங் கூறினார். மேலும் 400 பேர் ஹூபே மாகாணத்தின் மற்ற இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகரித்து வரும் நோயாளிகளால் வூஹானின் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அனுப்ப சீன அதிகாரிகள் விரைவு நடவடிக்கை மேற்கொள்கின்றனர், மேலும் அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வூஹானில் உள்ள பல மருத்துவர்கள் சரியான முக கவசம் அல்லது பாதுகாப்பு உடைகள் இல்லாமல் நோயாளிகளை பார்க்க நேர்ந்ததாகவும், அவை தவறாமல் மாற்றப்படும் போது, அதே உபகரணங்களை வேறு வழியின்றி பயன்படுத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், சீனாவின் பிரதான நிலப்பகுதியில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 121 அதிகரித்துள்ளது என்று தேசிய சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை இன்று (பிப்ரவரி 14) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 3 பேருந்துகள் மோதி விபத்து; 11 பேர் மருத்துவமனையில் அனுமதி..!