கொரோனா வைரஸ் (COVID-19); சீனாவின் இன்றைய நிலவரம் – 5,000க்கும் மேற்பட்ட புதிய சம்பவங்கள் பதிவு..!

COVID-19
China reports 121 new coronavirus deaths, more than 5,000 new cases

சீனாவின் பிரதான நிலப்பகுதியில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 121 அதிகரித்துள்ளது என்று தேசிய சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) தெரிவித்துள்ளது.

இறப்புகளில் பெரும்பாலானவை மத்திய மாகாணமான ஹூபே மற்றும் அதன் தலைநகர் வூஹானில் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 3 பேருந்துகள் மோதி விபத்து; 11 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

இதில் வூஹானில் 88 பேர் உட்பட மாகாணத்தில் மொத்தம் 116 புதிய இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஹூபேயின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், கூடுதலாக 5,090 தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர், இதில் ஹூபேயில் மட்டும் 4,823 நபர்கள் பதிவாகியுள்ளனர். இந்த ஹூபே மாகாணத்தின் புதிய சம்பவங்களில் ஐந்தில் நான்கு பங்கு வூஹானில் பதிவாகியுள்ளது.

இறப்பு எண்ணிக்கை 1,488 லிருந்து 1,380 க்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளது, சில இறப்புகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கணக்கிடப்பட்டதாக அதிகாரிகள் கூறியதையடுத்து திருத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் ரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் இந்திய ஊழியர் உட்பட இருவர் பலி..!

தேசிய சுகாதார ஆணையம் ஹூபேயில் புள்ளிவிவரங்களை கண்டுபிடித்த பின்னர் 108 இறப்புகளை நீக்கியுள்ளது.

சரிபார்ப்புக்கு பின்னர் ஹூபேயில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையிலிருந்து 1,043 ஐக் நீக்கியுள்ளது. மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை இப்போது 63,851 ஆக உள்ளது.

Source : CNA