கொரோனா வைரஸ் (COVID-19); 80 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே லேசான நோய்..!

COVID-19
More than 80% of COVID-19 patients have mild disease and recover: WHO chief (Photo: Straits Times)

புதிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 80 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே லேசான நோய் ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு (பிப்ரவரி 17) தெரிவித்துள்ளது.

COVID-19 வைரஸ் இறப்பு எண்ணிக்கை சீனாவில் 1,800-ஐத் தாண்டியுள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் அங்கு 70,500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குழந்தை உட்பட இருவருக்கு COVID-19 வைரஸ் தொற்று உறுதி; மேலும் 5 பேர் குணமடைந்துள்ளனர்..!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Ghebreyesus), இதில் 14 சதவீத நோயாளிகளுக்கு நிமோனியா போன்ற கடுமையான நோய்கள் இருக்கும் என்று கூறினார்.

“சுமார் ஐந்து சதவிகித வைரஸ் சம்பவங்களில் உறுப்பு செயலிழப்பு, செப்டிக் ஷாக் மற்றும் சுவாசக் கோளாறு மற்றும் சில சந்தர்ப்பங்களில் மரணத்திற்கு கூட வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

குழந்தைகளிடையே குறைவான அளவில் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகவும், அதற்கான காரணத்தை புரிந்து கொள்ள கூடுதல் ஆராய்ச்சி தேவை என்றும் கூறினார்.

இதையும் படிங்க : COVID-19 வைரஸ் தொற்று: உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் அறிவுரைகள்..!

SARS நோயுடன் ஒப்பிடுகையில் COVID-19 காரணத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவு என்றும் டெட்ரோஸ் கூறினார்.

மேலும், சீனாவிற்கு வெளியில் COVID-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மக்கள் தொகையில் சிறிய பங்கு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Source : CNA