சிங்கப்பூரில் நான்காவது முட்டை பண்ணை… கையெழுத்தானது ஒப்பந்தம்!

Photo: Minister Grace Fu Official Facebook Page

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டக் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், சாமானியரின் வாழ்க்கை தொடங்கி, தொழிலாளர்கள், வர்த்தக நிறுவனங்களில் உரிமையாளர்கள் பொருளாதார ரீதியிலாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனால், 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களின் தனிநபர் கடன் வெகுவாக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு வாழ் சிங்கப்பூரர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!

அதேபோல், பல்வேறு தொழில் நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. இதன் காரணமாக, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலாளர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

அதே சமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் சரியத் தொடங்கியது. இந்த நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் பயனாக, உலகில் முன்னணியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தின் கிளையை இங்கு தொடங்கியுள்ளனர். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு புதிதாக வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மேலும், சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து, அதில் தேர்ச்சிப் பெறுபவர்களை தங்கள் நிறுவனத்தின் பணியமர்த்தி வருகின்றனர்.

சிங்கப்பூர் ரீடிஸ்கவர் பற்றுச்சீட்டு விண்ணப்பங்களின் மதிப்பு S$178 மில்லியன்

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் முட்டை உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஈஸ் பூட்ஸ் நிறுவனம், சுமார் 100 மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவில் சிங்கப்பூரில் நான்காவது முட்டை பண்ணை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் உணவு அமைப்பும் (Singapore Food Agency- ‘SFA’), ஈஸ் பூட்ஸ் நிறுவனமும் (ISE Foods Holdings Pte Ltd- ‘IFH’) கையெழுத்திட்டுள்ளன. சுமார் 13 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ள இந்த முட்டை பண்ணையின் கட்டுமான பணிகள் வரும் 2024- ஆம் ஆண்டில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மில்லியன் கோழிக்குஞ்சுகளைக் கொண்டிருக்கும் இப்பண்ணையில், தினமும் 360 மில்லியன் முட்டைகள் உற்பத்திச் செய்யப்பட உள்ளது. சிங்கப்பூரில் தேவைப்படும் முட்டைகளில் 50% இந்த பண்ணை பூர்த்திச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முட்டை பண்ணையால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.