இந்திய ஊழியருக்கு அடித்த லாட்டரி: இந்திய மதிப்பில் “500 மில்லியன்” – ஓட்டுநர், கோடீஸ்வரர் ஆன மகிழ்ச்சி!

Abu Dhabi-based Indian expat wins Dh25 million Big Ticket draw

ஐக்கிய அரபு அமீரக அபுதாபியில் கடந்த வாரம் நடைபெற்ற பிக் டிக்கெட்டின் ரேஃபிள் டிரா தொடர் 235-ல் இந்திய நாட்டவர் 25 மில்லியன் திர்ஹம் தொகையை வென்றுள்ளார்.

அமீரத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் “ஹரிதாசன் மூதட்டில் வாசன்னி” என்ற இந்திய ஊழியர், பிக் டிக்கெட்டின் மிகப்பெரிய தொகையை தட்டி தூக்கியுள்ளார்.

இந்தியா செல்லும் பயணியா நீங்க? – தொற்று ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டது “இந்தியா”

இதுபற்று அவர் கூறுகையில்; “இது நம்பமுடியாத விஷயம். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை… ஏன் என்னால் பேச கூட முடியவில்லை” என்று வாயடைத்து போனார்.

மேலும், “இதை நான் எதிர்பார்க்கவே இல்லை, இந்த தொகையின் மதிப்பு 500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு சமம்” என்றும் ஆச்சரியத்தில் கூறினார்.

ஹரிதாசன் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், இவர் கடந்த பத்தாண்டுகளாக அபுதாபி மற்றும் அல் ஐன் பகுதிகளில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.

திருச்சி விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு – ஜன. 9 முதல் நடைமுறை!