“சிங்கப்பூர், திருச்சி இடையே கூடுதல் விமானச் சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

Photo: Air India Express Official Twitter Page

கரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை விமானம் மூலம் தாயகம் அழைத்து வர ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தை செயல்படுத்தியது இந்திய அரசு. ‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் இதுவரை 10.50 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளில் இருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இது தவிர கடல்மார்க்கமாக சமுத்திர சேது திட்டமும் செயல்படுத்தப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

மார்சிலிங் லேன் ஈரச்சந்தை மற்றும் ஹாக்கர் மையம் தற்காலிமாக மூடல்.!

தற்போது வரை சர்வதேச விமான பயணிகளுக்கான போக்குவரத்துக்கு இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தடையை நீட்டித்துள்ளது. இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச வழித்தடங்களில் ‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும்; சர்வதேச சரக்கு விமானப் போக்குவரத்துக்க்கும் தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் ‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடர்ந்து விமானச் சேவையை வழங்கி வருகிறது. எனினும், விமான சேவை தொடர்பான அட்டவணை வெளியான ஒரு சில நாட்களிலேயே அனைத்து நாட்களுக்குமான விமான பயண டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. இதனால் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் இந்தியா வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கூடுதல் விமான சேவையை அறிவித்துள்ளது.

பொய்யான தகவல்கள் மூலம் “Work Pass” அனுமதி பெற முயற்சி – 18 பேர் கைது

அதன்படி, செப்டம்பர் 23, 26, 30 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும் (IX 684), சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் (IX 683) என இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், இதற்கான விமான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிவிப்பால், சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு திரும்பக் காத்திருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.