சிங்கப்பூரில், “இப்போ வாங்கிக்கலாம், பணம் லேட்டா கொடுக்கலாம்” திட்டம்!

சிங்கப்பூரில் அதிகமான சில்லறை விற்பனையாளர்கள் ‘Buy Now, Pay Later’ என்ற தவணை முறை திட்டத்தை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது,

கிருமித்தொற்று தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு சில்லறை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கழிப்பறைக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து பெண்ணை காணொளி எடுத்த ஆடவர் கைது

அதனை எதிர்கொள்ளும் வகையில், இந்த புதிய தவணை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பயனர்கள் இளம் வயது நுகர்வோர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக 23 வயது அல்லது அதற்கும் குறைவாக உள்ள இளம் நுகர்வோர் இந்த திட்டத்தை அதிகம் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த திட்டத்தில் நாம் பணத்தை திருப்பி செலுத்தும் போது, காலம் தவறினால் அதற்கு தண்டனையாக கூடுதல் பணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும்.

வாடிக்கையாளர்கள் கடன் சுமைக்கு ஆளாகும் சூழலும் இதில் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கடன் ஆபத்து குறித்த கவலைகளுக்கு மத்தியில், சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) அதன் விதிமுறைகளை மறுஆய்வு செய்து வருகிறது.

இந்தியா செல்லும் அனைத்து சர்வதேச பயணிகளின் கவனத்திற்கு…!