பிரம்படி வாங்கத் தயாரா..? சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்கள் இந்த தவறை செய்தால், 2000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம்!

Singapore Caning
Singapore Caning

சிங்கப்பூர் மக்களுக்கு நாட்டின் விதி குறித்து தெரிந்திருக்கும். ஆனால் புதிதாக வருகை தரும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு, ஒரு சில சட்ட விதிமுறைகள் தெரிவதில்லை. சிங்கப்பூரில் பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கான தற்போதைய தண்டனை குறித்து பார்ப்போம்.

பொது சொத்தை சேதப்படுத்துபவர்க்கு சிங்கப்பூரில் தண்டனை என்னவென்றால்,  மூன்று முதல் எட்டு பிரம்படியும், அதிகபட்சமாக 2000 சிங்கப்பூர் டாலர்கள் (ஏறக்குறைய 1 லட்சம் ரூபாய்) அபராதம் கட்ட நேரிடும். சில நேரங்களில் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். அது குற்றத்தின் தன்மையை பொறுத்தது.

தண்டனையை பார்க்கும் பலருக்கு பொதுசொத்தை சேதப்படுத்தும் எண்ணம் துளியும் வராது.

சிங்கப்பூரில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது இந்த தடியடி நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன  சிங்கப்பூரின் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் புருனே உட்பட வேறு சில முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளிலும் இதேபோன்ற உடல் ரீதியான தண்டனைகள் பயன்படுத்தப்படுகின்றன .

. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பரந்த அளவிலான குற்றங்களுக்கு 50 வயதிற்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். ஒரு விசாரணைக்கு அதிகபட்சம் 24 பிரம்படி வரை கிடைக்கும்.

இது சிறப்புப் பயிற்சி பெற்ற சிறை ஊழியர்களால் சிறையில் அடைக்கப்பட்ட பகுதியில் கைதியின் வெற்று பிட்டத்தில் நீண்ட மற்றும் தடிமனான பிரம்பை பயன்படுத்தி தண்டனை விதிக்கப்படுகிறது. முன்னதாக நீதிமன்றத்தில் தடியடித் தண்டனை விதிக்கப்படாத ஆண் குற்றவாளிகள், சிறையில் இருக்கும் போது மோசமான குற்றங்களைச் செய்தால், அதே வழியில் தடியடி மூலம் தண்டிக்கப்படலாம். இதேபோல், சீர்திருத்த நிறுவனங்களில் உள்ள சிறார் குற்றவாளிகள் கடுமையான குற்றங்களுக்கு பிரம்படியால் தண்டிக்கப்படலாம்.