S$300 மதிப்புள்ள CDC வவுச்சர்கள் – இன்று (ஜன.3) முதல்…!

cdc-vouchers-jan-2023
NTUC FairPrice Facebook

ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்திற்கும் இன்று ஜனவரி 3, 2023 முதல் S$300 மதிப்புள்ள CDC வவுச்சர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஷ்யூரன்ஸ் பேக்கேஜின் கீழ் S$200 CDC வவுச்சர்களையும், அக்டோபர் 2022 அன்று அறிவிக்கப்பட்ட S$1.5 பில்லியன் ஆதரவுத் தொகுப்பிலிருந்து S$100 CDC வவுச்சர்களையும் அது உள்ளடக்கியுள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி மரணித்து வரும் நிலையில், இது தேவையா?”

சிங்கப்பூரில் உள்ள குடும்பங்கள் RedeemSG மூலம் இந்த வவுச்சர்களைப் பெறலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட முக்கிய வர்த்தகர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தலாம்.

அதாவது HAO Mart, NTUC FairPrice, Prime Supermarket, Sheng Siong மற்றும் U Stars Supermarket ஆகிய ஐந்து கடைகளில் அவற்றை பயன்படுத்த முடியும்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி… சீட்டில் கிடந்த 310 கிராம் தங்க செயின் – போட்டது யார் ? விசாரணை