சிங்கப்பூரில் பிரபலமான கடையை நடத்திவந்த உரிமையாளர் தவறி விழுந்து மரணம்

nan-rong-chee-cheong-fun
Shin Min Daily News & Bai RuiHai

சிங்கப்பூர்: பெண்டிமீர் ஃபுட் சென்டரில், S$1 க்கு Chee cheong fun விற்கும் பிரபல கடை உரிமையாளர் உயிரிழந்த செய்தி அவரின் வாடிக்கையாளர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நள்ளிரவில் அவரது வீட்டில் தவறி விழுந்த அவர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அந்தரத்தில் தொங்கிய மலைப்பாம்பு… தெறித்த மக்கள் – நீண்ட நேரம் போராடி மீட்ட ACRES வீரர்கள்

அவர் இறந்த செய்தியை வாடிக்கையாளர் ஒருவர் ஃபேஸ்புக்கில் முதலில் பகிர்ந்ததை அடுத்து இறப்பு செய்தி உறுதி செய்யப்பட்டது.

Chen Qingquan என்ற அவருக்கு வயது 83 என்றும், கடந்த ஜனவரி 3 அன்று அவர் காலமானார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடைசியாக ஜனவரி 2 ஆம் தேதி காலை 5 மணிக்கு வழக்கம் போல் அவர் கடைக்கு சென்றதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

அவருக்கு 81 வயது மனைவியும் மற்றும் மகனும் உள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி… முன் அனுமதி இல்லாமல் பொருளை கொண்டு வந்து பிடிபட்ட நபர்