தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகளை போக்குவதாக நம்பிக்கை – சிங்கப்பூரில் இளநீர் விற்பனை அதிகரிப்பு

AFP

கோவிட் -19 தடுப்பூசியின் பக்க விளைவுகளை இந்த பானம் குறைக்கலாம் என்று சிலர் நம்புவதால், சிங்கப்பூரில் இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலையில் பானத்தின் விற்பனை 140 சதவீதம் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தர் “சியாம் கோகநட்” நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாயகம் சென்றால் சிங்கப்பூருக்கு திரும்பிவர முடியாமல் போய்விடுமோ.? – குழப்பத்தில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்.!

அதே காலகட்டத்தில் அதன் பிரெஷ் தேங்காய் விற்பனையும் 70 சதவீதம் உயர்ந்தது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

பல சில்லறை விற்பனையாளர்கள் தேங்காய் மற்றும் இளநீரை வாங்குவதாகவும், அத்துடன் வீட்டு விநியோகத்திற்கான ஆர்டர்கள் அதிகம் கிடைப்பதாகவும் நிறுவன பொது மேலாளர் திரு கெல்வின் என்ஜியன் கூறியுள்ளார்.

மேலும், இது தடுப்பூசி போட்டுக்கொண்ட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பரிசாக வழங்கப்படுவதாக திரு கெல்வின் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்திலிருந்து விற்பனை படிப்படியாக அதிகரித்ததாகவும், ஜூன் மாதத்தை விட விற்பனை தற்போது 60 சதவிகிதம் அதிகமாக இருப்பதாகவும் நிறுவனர் மற்றும் இயக்குநர் கெவின் டான் கூறியுள்ளார்.

கோகோ வாட்டரை, சில்லறை விற்பனையாளர்களான கோல்ட் ஸ்டோரேஜ், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட் மற்றும் ரெட்மார்ட் ஆகியவை ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இப்போது இரண்டு மடங்கு வேகத்தில் நிரப்பி வருவதாகவும் புரோவெனன்ஸ் டிஸ்ட்ரிபியூஷன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இளநீர், காய்ச்சல் அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகளைப் போக்க உதவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆடவர் – இறந்த நிலையில் கண்டெடுப்பு