‘டிபிஎஸ் வங்கியில் பணி’- விண்ணப்பிக்க அழைப்பு!

Photo: DBS Bank

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அமல்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, தொழிலாளர்கள், மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள், சிறு, குறு வர்த்தக தொழில் நிறுவனங்களும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டனர். இதில் சில நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையை நிரந்தர மூடினர். இதன் காரணமாக, தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தன. அவர்கள் அடுத்து என்ன செய்வது? என்று அறியாமல் தவித்தன.

மேலும், சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி விலக்கு தள்ளுபடி இவ்வாண்டு இறுதி வரை நீட்டிப்பு.!

இதன் பயனாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிங்கப்பூரில் தங்களது அலுவலகத்தின் கிளையைத் தொடங்கியுள்ளனர். மேலும், அலுவலகத்தில் பணிபுரிய சிங்கப்பூரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் பணியமர்த்தப்படுகின்றன.

தற்போது, சிங்கப்பூரில் கட்டுமானத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, மற்ற துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில், சிங்கப்பூரில் முக்கிய வங்கியாக திகழும் டிபிஎஸ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டிபிஎஸ் வங்கியில் தொழில்நுட்பப் பிரிவில் பணிப்புரிய 150 பேரை பணியமர்த்த உள்ளது. ‘டிபிஎஸ் ஹேக்2ஹயர்’ (HACK2HIRE) எனும் அந்த திட்டம் மேம்பாட்டாளர், தொழில்நுட்ப பொறுப்புகளில் பணியிடங்களை நிரப்ப இலக்கு கொண்டுள்ளது.

பணியில் சேர விரும்புவோர் வரும் அக்டோபர் 17- ஆம் தேதி வரை https://www.dbs.com/hack2hire/sg/index.html என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்களுக்கு தொழில்நுட்பம், இணையச் சவால் உள்ளிட்ட பல கட்டத் தேர்வுகளில் அவர்கள் பங்கேற்க வேண்டும். பல கட்டத் தேர்வுகளுக்கு பிறகு தகுதி வாய்ந்த 150 பேர் டிபிஎஸ் வங்கியில் பணியமர்த்தப்படுவர்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 90 பேர் பாதிப்பு – விடுதிகளில் பாதிப்பு நிலவரம்

‘ஹேக்2ஹயர்’ திட்டம் நான்காவது ஆண்டாக இடம் பெறுகிறது. கொரோனா காரணமாக, இந்த திட்டம் கடந்த ஆண்டு இடம் பெறவில்லை. அதற்கும் முந்தைய ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 120 பேர் டிபிஎஸ் வங்கியில் பணியமரத்தப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், பிளாக் செயின் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை டிபிஎஸ் வங்கி விரிவுப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.