ஏப்ரல் மாதத்தில் இருந்து டோக்கன்-களை நிறுத்தவுள்ள சிங்கப்பூர் DBS வங்கி!

(Photo: IE)

DBS வங்கியில் வரும் ஏப்ரல் 1 முதல் அதன் வாடிக்கையாளர்கள் டோக்கன்களைப் (token) பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த டோக்கன்களை டிஜிட்டல் முறையில் கூடுதல் தடையின்றி மாற்றுவதற்கான வங்கியின் திட்டத்தில் இது ஒரு பகுதி ஆகும்.

சிங்கப்பூரில் பேருந்துடன் விபத்தில் சிக்கிய பெண் – மருத்துவமனையில் அனுமதி!

DBS வங்கியின் அனைத்து உள்நுழைவுகளும் (logins), அதாவது சுமார் 90 சதவீதம், டிஜிட்டல் வங்கி மொபைல் செயலியை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செயலிகள் டிஜிட்டல் டோக்கன் அம்சங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த டிஜிட்டல் டோக்கனை digibank online, eNets மற்றும் eCommerce பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

DBS வலைத்தளத்தின்படி, வரும் பிப்ரவரி 1 முதல் அது டோக்கன்களை வழங்குவதை நிறுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தொற்று – அச்சம் தேவையில்லை…!