‘முன்னேறும் சிங்கப்பூர்’ இயக்கத்தின் இலக்கு – கிராப் நிறுவனத் தலைமையகத்தின் திறப்புவிழாவில் விளக்கமளித்த துணைப் பிரதமர் வோங்

lawrence wong says about foreign workers
PHOTO: MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION
சமூக மேம்பாட்டு இயக்கமான ‘முன்னேறும் சிங்கப்பூர்’ சமீபத்தில் தொடங்கப்பட்டது.அந்த இயக்கத்தில் தொழில்துறையினருக்கு பணி இருக்கிறது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
கிராப் நிறுவனத்தின் 10-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் அதன் புதிய தலைமையகம் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 11 அன்று திறக்கப்பட்டது.அதில் கலந்து கொண்ட துணைப்பிரதமர் உரையாற்றினார்.

 

கிராப் நிறுவனத்தின் வளர்ச்சி வரலாறு அனைவருக்குமே முக்கியமாக சிங்கப்பூரர்களுக்கு ஊக்கமூட்டுவதாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரைப் போலவே இந்நிறுவனமும் ஒன்றுமே இல்லாத நிலையில் தொடங்கி வளர்ச்சியைக் கண்டுள்ளதாகக் கூறினார்.அதன் வளர்ச்சிப் பயணத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக கூறினார்.

 

நாட்டில் எதிர்காலச் சவால்களை சமாளிக்கும் வகையில் குடிமக்களையும் ஊழியர்களையும் தயாராக்க வேண்டும் என்ற இலக்கை அரசாங்கமும் முதலாளிகளும் பகிர்ந்து கொள்வதாக கூறினார்.
அரசாங்கத்தின் பங்காக நிறுவனங்கள் செழித்தொங்குவதற்குத் தேவையான செயல்பாடுகளை உருவாக்கும் என்றும் துணைப்பிரதமர் தெரிவித்தார்.