மின்சாரத்தில் இயங்கக்கூடிய முதல் பயணிகள் படகுச் சேவையைத் தொடங்கவிருக்கும் ‘Shell’ நிறுவனம்!

PHOTO: INCAT CROWTHER UK

சிங்கப்பூரில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்று ‘Shell’ நிறுவனம். சிங்கப்பூர் மட்டுமல்லாது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ‘Shell’ நிறுவனத்தின் பெயரில் பெட்ரோல், டீசல் பங்க்குகள் செயல்பட்டு வருகின்றன. சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியில் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் ஒன்று.

இந்த நிலையில், முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கக்கூடிய முதல் பயணிகள் படகுச் சேவையைத் தொடங்கவிருப்பதாக ‘Shell’ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் முதல் மின்சார படகு சேவை வரும் 2023- ஆம் ஆண்டு மெயின்லேண்ட் (Mainland) மற்றும் புலாவ் புகோம் (Pulau Bukom) இடையே ‘Shell’ நிறுவனத்தால் இயக்கப்பட உள்ளது.

செப்.24 முதல் மருத்துவமனைகளில் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை!

இதற்காக, மின்சாரத்தில் இயங்கக் கூடிய மூன்று படகுகளை வடிவமைக்கவும், உருவாக்கவும், இயக்கவும் பென்குயின் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு (Penguin International Limited) ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது ‘Shell’ நிறுவனம்.

பேட்டரி மூலம் இயக்கப்படும் 200 இருக்கைகள் கொண்ட ஒற்றை டெக் கப்பல்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்சார படகு சேவை மூலம் தொழிலாளர்கள் புலாவ் புகோமில் (Pulau Bukom) உள்ள ஷெல்ஸ் எனர்ஜி (Shell’s Energy) மற்றும் கெமிக்கல்ஸ் பூங்காவிற்கு (Chemicals Park) அழைத்துச் செல்லப்படுவர்.

‘Shell’ படகுகள் பொருத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி அமைப்பு 1.2MWh திறன் கொண்டது. மின்சார படகில் நாள்தோறும் இரவு சார்ஜிங் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா 2021: முன்பதிவு தொடங்கும் தேதி அறிவிப்பு!

இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகுவதோடு, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும். சிங்கப்பூரில் தற்போது சூரியஒளி, லித்தியம் பேட்டரி தொழிற்சாலைகள், மின்சார வாகனங்களை உற்பத்திச் செய்யும் நிறுவனங்களை அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசலின் பயன்பாடு குறைந்துள்ளது.

அதேசமயம், மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்களின் விலை அதிகமாக இருக்கும் நிலையில் அவற்றின் விலையைக் குறைப்பது குறித்து அரசு மற்றும் நிறுவனங்கள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.