“சிங்கப்பூர், சிட்னி இடையே விமான சேவை”- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

Photo: Singapore Airlines Official Facebook Page

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விகிதம், கொரோனா நோய்த்தொற்று விகிதம் ஆகியவை அடிப்படையாகக் கொண்டு, சிங்கப்பூர் அரசு, கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களுக்கான சிறப்புப் பயணப் பாதைத் திட்டத்தின் கீழ் (Vaccinated Travel Lanes- ‘VTLs’) அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், தென்கொரியா உள்ளிட்ட 11 நாடுகளுக்கு விமான போக்குவரத்தை இரு மார்க்கத்திலும் தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் சவால் அறநிதிக்கு கெப்பல் கிளப் 1.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் நிதியைத் திரட்டி சாதனை!

அதைத் தொடர்ந்து, அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கான விமான சேவை தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், அதற்கான டிக்கெட் முன்பதிவையும் தொடங்கியுள்ளது. மேலும், இவ்வழித்தடங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்கவும் அந்நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா இடையே விமான சேவையைத் தொடங்க உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நடப்பாண்டு நவம்பர் 1- ஆம் தேதி முதல் நியூ சவுத் வேல்ஸின் (New South Wales) எல்லைகள் திறக்கப்படுகிறது.

சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு விரைவு சாலைகளில் அனுமதி கிடையாது!

இதனால், நவம்பர் 1- ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்ட ஆஸ்திரேலியா நாட்டு குடிமக்கள் (Australian Citizens) மற்றும் நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்கள் (Permanent Residents), சிங்கப்பூரில் இருந்து சிட்னிக்கு (Sydney) பயணம் மேற்கொள்ளலாம். இவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.

நவம்பர் 1- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 26- ஆம் தேதி வரை சிங்கப்பூர்- சிட்னி இடையே இரு மார்க்கத்திலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும். இவ்வழித்தடத்தில் வாரத்திற்கு 17 பயணிகள் விமானங்கள் இயக்கப்படும். அதேபோல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், சிங்கப்பூரில் இருந்து டார்வினுக்கு (Darwin) நவம்பர் 2 மற்றும் நவம்பர் 8 ஆகிய தேதிகளில் கூடுதலாக விமானங்கள் இயக்கப்படும். இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/travel-info/entry-into-australia/?itm_source=homepagebanner  என்ற இணையதளத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.