சிங்கப்பூரில் புதிய எண்கள் இல்லாத GrabPay அட்டை அறிமுகம்..!

கிராப் (Grab), புதிய எண்கள் இல்லாத கிராப்பே (GrabPay) அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த அட்டை சிங்கப்பூரில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அட்டை முற்றிலும், அதாவது முன் மற்றும் பின் பகுதிகளில் எண்கள் இல்லாதது. இது திருட்டு மற்றும் தனிப்பட்ட நிதி சார்ந்த தகவல்களைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு வடிமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, இந்த அட்டை PIN பாதுகாப்புடன் “ஆப் லாக்” செயலி அம்சத்துடன் வருகிறது. ஒருவேளை அட்டையை தொலைத்தால் அதிலிருந்து கட்டணங்கள் செலுத்துவதை உடனடியாக நிறுத்தலாம்.

இந்த கிராப் பே அட்டை, தற்போதைய மாஸ்டர்கார்டுடனான (Mastercard) கிராபின் கூட்டாண்மையின் உச்ச நிலையாகும்.

இதன் மூலம் மாஸ்டர்கார்டை ஏற்றுக்கொள்ளும்  உலகெங்கிலும் உள்ள அனைத்து வணிகங்களும் இந்த கிராப் அட்டையையும் ஏற்றுக்கொள்ளும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You cannot copy content of this page