ஹாவ்காங் வீவக வீடுகளுக்கு குவிந்த விண்ணப்பங்கள்!

Photo: HDB

சிங்கப்பூரில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பொதுமக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் நலனைக் கருத்தில் கொண்டு படிப்படியாகத் தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனால் உள்நாட்டு ஏற்றுமதி, இறக்குமதி, வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளனர். இதனால் சிங்கப்பூர் பொருளாதாரம் கணித்ததைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் முதிர்ச்சியடைந்தப் பேட்டைகளைவிட முதிர்ச்சியடையாத (Non- Mature Estate/ Mature Estate) ஹாவ்காங் (Hwa Hong), ஜூரோங் ஈஸ்ட் (Jurong East) உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பரப்பளவைக் கொண்ட தேவைக்கேற்ப வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (Housing And Development Board- ‘HDB’) வீடுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு குவிந்துள்ளது. இதனால் வீடுகளை வாங்க அதிக விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

கோலாகலக் கொண்டாட்டங்களுடன் நிறைவடைந்த 56- வது தேசிய தின அணி வகுப்பு!

இதில் ஹாவ்காங்கில் உள்ள பகுதியில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கட்டி வரும் நான்கு அறைக் கொண்ட வீடுகளுக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். அதே சமயம், முதிர்ச்சியடையாத பேட்டைகளில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவில் விண்ணப்பங்கள் குவிந்தன.

‘ஹாவ்காங் சிட்ரீன்’ மற்றும் ‘கோவன் வெல்ஸ்ப்ரிங்’ ஆகிய திட்டங்களில் இருக்கும் 459 நான்கு அறைகள் கொண்ட வீடுகள் விற்கப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் 17- ஆம் தேதி நிலவரப்படி, அவற்றை வாங்க 10,602 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் முதன் முறையாக வீடு வாங்க விண்ணப்பிப்போர் 17- ல் ஒருவருக்குத் தான் வீடு கிடைக்கும். இரண்டாவது முறையாக வீடு வாங்க விண்ணப்பிப்போர் 55 பேரில் ஒருவருக்கு மட்டுமே வீடு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், ‘ஹாவ்காங் சிட்ரீன்’ திட்டத்தின் 102 ஐந்து அறைக் கொண்ட வீடுகளுக்கு வந்த விண்ணப்பங்கள் குறைவு ஆகும். ஜூரோங் ஈஸ்டில் மொத்தம் 240 தேவைக் கேற்ப கட்டப்படும் நான்கு அறை கொண்ட வீடுகள் விற்கப்படுகின்றன. அவற்றில் ஒவ்வொன்றை வாங்கவும் வீடு வாங்குவோர் 11 பேருக்கும் மேல் விண்ணப்பித்துள்ளனர்.

சிங்கப்பூர் வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்!

இத்துடன், ஒப்பிடும் போது காலாங்/ வாம்போ, குவீன்ஸ் டவுன், தெம்பனிஸ் போன்ற முதிர்ச்சியடைந்தப் பேட்டைகளில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வீடுகளை வாங்குவதற்கான போட்டிகள் குறைவாக இருக்கிறது.

குவீன்ஸ் டவுனின் ‘குவீன்ஸ் ஆர்க்’ திட்டத்திலும் 534 நான்கு அறைக் கொண்ட வீடுகள், ஒவ்வொன்றுக்கும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முடிக்க சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

முதிர்ச்சியடைந்தப் பேட்டைகளில் வீடுகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்ட மக்கள், தற்போது முதிர்ச்சியடையாதப் பேட்டைகளிலும் வீடுகளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்த போதும், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வீடுகள் விற்பனை அமோகமாக நடத்திருந்தது குறிப்பிடத்தக்கது.