டிசம்பர் முதல் வழக்கமான சர்வதேச விமானங்களுக்கு இந்தியா அனுமதி – சிங்கப்பூருக்கு கட்டுப்பாடு

who came to Chennai from Singapore was arrested

வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.

ஆனால், கோவிட்-19 தொற்று ஆபத்து உள்ள 11 நாடுகள் மற்றும் ஐரோப்பா மற்றும் UK ஆகிய நாடுகளுக்குச் செல்லும் சேவைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

தள்ளுபடியில் விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்கலாம்.. எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!!

தொற்றுநோய் ஆபத்து இல்லை என்று அடையாளம் காணப்பட்ட நாடுகளுக்கு முழு விமானங்கள் மீண்டும் தொடங்கப்படும் என்று இந்திய அரசாங்கம் கூறியுள்ளதாக ET தெரிவித்துள்ளது.

ஆபத்தில் உள்ள நாடுகளில், இந்தியாவுடன் பபுள் ஏற்பாடு செய்துகொண்ட நாடுகளாக இருந்தால், 75% கோவிட்-க்கு முந்தைய சேவைகள் அனுமதிக்கப்படும்.

அதுவே இந்தியாவுடன் பபுள் ஏற்பாடு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத நாடுகளுக்கு 50% சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட கட்டாய மரண தண்டனை – மேல்முறையீடு நிராகரிப்பு

தொற்றுநோய் ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளில் சிங்கப்பூர், இஸ்ரேல், பங்களாதேஷ், ஹாங்காங், UK, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் ஃபின்லாந்து ஆகியவற்றுடன் இந்தியா “பபுள்” விமான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.

சிங்கப்பூர்-இந்தியா இடையே VTL பயண ஏற்பாடு இந்த மாதம் 29ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக விமானக் கட்டணங்களால் தமிழர்கள் அவதி: “சிங்கப்பூர் to தமிழ்நாடு நேரடி விமானம் வேண்டும்”