சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் முதலீடுகள்…!

India Islands contribute

இந்திய நாட்டிற்கு கடந்த 20 ஆண்டுகளில், வெளிநாட்டு முதலீடுகளின் அளவை பொறுத்தவரை தீவு நாடுகளிலிருந்து, 54% முதலீடுகள் வந்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குறித்து கணக்கெடுப்பை இந்தியாவின் மத்திய வர்த்தக அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று மூன்று பள்ளிவாசல்கள் தற்காலிகமாக மூடல்!

அதன் அடிப்படையில், வர்த்தக ரீதியாக இந்தியாவுடன் அதிக நட்புறவுடன் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் புள்ளிவிவரங்களின்படி, அவற்றில் இருந்து 7% மற்றும் பிரிட்டனில் இருந்து 6% முதலீடுகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தீவு நாடுகளான சிங்கப்பூர், கேமன் தீவுகள், மொரீசியஸ் மற்றும் சிப்ரஸ் ஆகியவற்றில் இருந்து 54% முதலீடுகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து மட்டும் அதிக அளவில் இந்தியாவுக்கு முதலீடுகள் வந்துள்ளன என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அதற்கு முன்பாக மொரீசியஸில் இருந்து அதிக அளவில் முதலீடுகள் வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, சிங்கப்பூரில் இருந்து 830 கோடி டாலர்கள் முதலீடுகள் வந்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரையில் கீழே இரத்த தடங்களுடன் கிடந்த ஆடவர் – காவல்துறை விசாரணை

இந்த மாதத்திற்கான இந்தியா–சிங்கப்பூர் இருவழி விமான முன்பதிவுகள் தொடக்கம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…