தொற்று ஆபத்து அதிகமுள்ள சர்வதேச பயணிகளுக்கு கடுமையாக சோதனை – இந்தியா அலர்ட்

AP/Rishi Lekhi

புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த பாதிப்புகளுக்கு மத்தியில், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற தொற்று ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியாவில் கட்டுப்பாடுகள் கடுமை ஆகிறது.

அங்கிருந்து வரும் சர்வதேச பயணிகளை கடுமையாக சோதனை செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளது.

தள்ளுபடியில் விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்கலாம்.. எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!!

இந்த மாத தொடக்கத்தில் தான் இந்தியா அதன் சில பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.

B.1.1.529 என அடையாளம் காணப்பட்ட புதிய மாறுபாடு கிருமி தீவிரமான தாக்கங்களை கொண்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியது.

உலகின் இரண்டாவது மிக மோசமாக COVID-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள நாடான இந்தியாவில், சமீபத்தில் புதிய தொற்று பாதிப்புகள் மிகச்சிறிய அளவில் பதிவாகியுள்ளன.

இந்திய மக்கள்தொகையில் பெரும் பகுதியினருக்கு அதிகரித்து வரும் தடுப்பூசிகள் மற்றும் ஆன்டிபாடிகள் காரணமாக தொற்று விகிதம் குறைவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு பரவாமல் தடுக்க பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதிக விமானக் கட்டணங்களால் தமிழர்கள் அவதி: “சிங்கப்பூர் to தமிழ்நாடு நேரடி விமானம் வேண்டும்”