புலம்பும் மலேசிய தொழில்துறையினர் – பதிலடி கொடுத்த சிங்கப்பூர் அரசாங்கம்

-chicken-
கோழி ஏற்றுமதிக்கு தடையை அறிவித்த மலேசியா இரண்டு மாதங்களுக்குப் பிறகு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை மீண்டும் தொடங்கவுள்ளதாக உணவுத் தொழில்துறை அமைச்சர் ரொனால்ட் கியாண்டி தெரிவித்தார்.மலேசியாவின் தேவையில் 106 சதவீத கோழியை உற்பத்தி செய்ய முடிவதால் ஏற்றுமதிக்கு தயாராக உள்ளதாக ஆகஸ்ட் 1 அன்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

தற்போது,சிறிய அளவிலான கோழி சப்ளையை மட்டும் கையாளுவதாகக் கூறினார்.இதனால் சந்தையில் கோழியின் விலை உச்சவரம்பு அதிகபட்ச விலையை விட குறைவாக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஜூன் மாதம் கோழிக்கறி ஏற்றுமதிக்கு மலேசியா தடை விதித்ததன் மூலம், சிங்கப்பூரின் விநியோகம் தடைபட்டது.சிங்கப்பூர் மூன்றில் ஒரு பங்கு கோழி இறைச்சியை மலேசியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது.

சிங்கப்பூருக்கு ம்போங் மற்றும் கருப்பு கோழிகள் போன்ற சில வகை கோழிகளை விற்க மலேசியா அனுமதித்திருந்தாலும்,வணிக பிராய்லர் பறவைகளை விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளன.இதனால் மலேசியாவின் உள்நாட்டு விநியோகம் தடையின்றி செயல்படுவதாக கியாண்டி கூறினார்.மலேசிய அரசாங்கம் ஏற்கனவே நாட்டிற்கு உறைந்த கோழியை இறக்குமதி செய்யும் தொழிலில் அதிகமானவற்றை செயல்படுத்தியுள்ளது.

மலேசியாவின் ஏற்றுமதித் தடைக்கு பதிலளிக்கும் விதமாக, சிங்கப்பூர் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து கோழிகளை வாங்குவதாக அறிவித்தது.
ஜூன் 30 அன்று, குளிரூட்டப்பட்ட, உறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழியை இறக்குமதி செய்வதற்கான புதிய ஆதாரமாக இந்தோனேசியா அங்கீகரிக்கப்பட்டதாக சிங்கப்பூர் தெரிவித்தது.தற்போது,மலேசியாவிலுள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சிங்கப்பூர் சந்தையை இழக்க நேரிடும் என்று புலம்புகின்றன