Infosys நிறுவனம் சிங்கப்பூர் நபர்களை பணி அமர்த்துகிறதா! – பெங்களூரிலிருந்து சிங்கப்பூரில் வேலைவாய்ப்பை உருவாகுவதற்கான காரணம் இதுதான்

infosys hire singapore degree holders software technology

இந்தியாவிலுள்ள பெங்களூருவைத் தளமாகக்கொண்ட பிரபல Infosys நிறுவனம் தனது செயல்பாட்டை சிங்கப்பூரில் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.இதன் ஒரு பகுதியாக நிறுவனம் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் 300 சிங்கப்பூர் ஊழியர்களை பல்வேறு பணிகளில் வேலைக்கு அமர்த்தும் என்று நிறுவனம் ஜூலை 26,2022 அன்று தெரிவித்தது.

சிங்கப்பூரிலுள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள்,தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள பாலிடெக்னிக்குகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் புதிய பட்டதாரிகளாக இருப்பவர்கள் போன்ற அனைவரும் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்று Infosys ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ வாரியம் (IMDA),புதியவர்கள் மற்றும் இடை-தொழில் நிபுணர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான சிங்கப்பூர் அரசாங்கத்தின் திட்டங்களை ஆதரிக்கிறது.தற்போது Infocomm Media Development Authority (IMDA) உடன் Infosys ஒத்துழைக்கிறது.IMDA இன் TechSkills Accelerator Company-Led Training (CLT) திட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூரர்களை பணியில் அமர்த்தும்.

சிங்கப்பூரில் 300 உள்ளூர் நபர்களை பணியில் அமர்த்தும் திட்டம் ,உலகளவில் நிறுவனத்தின் உள்ளூர்மயமாக்கல் உத்திக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதாக Infosys நிறுவனத்தின் துணைத்தலைவர் ஷாஜி மேத்யூ கூறினார்.