ஐபோன் 11 சீரிஸ் – முழு விவரம் இங்கே

iphone 11 iphone 11 pro iphone 11 pro max price, specification review
iphone 11 iphone 11 pro iphone 11 pro max price, specification review

Apple iPhone 11 Pro Camera : அனைத்து போன்களிலும் தான் ப்ரோ ஆப்சன் இருக்கிறது. ஆனால் ஆப்பிள் போனில் ப்ரோ மோட் என்றால் அது என்னவாக இருக்கக் கூடும் என்ற ஆர்வம் அனைவர் மனதிலும் எழாமல் இல்லை. இது குறித்து, அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் பில் சில்லார் குறிப்பிடுகையில் “ஐபோன் 11 ப்ரோ என்பது முழுக்க முழுக்க போட்டோகிராஃபி பிரியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது” என்று அறிவித்தார்.

Apple iPhone 11 Pro Camera சிறப்பம்சங்கள்

ஆனாலும் ஐபோன் 11-ல் இருக்கும் சிறப்பம்சங்களைத் தவிர வேறேதும் புதிய சிறப்பம்சங்கள் ஏதும் இல்லாத ஐபோன் 11 ப்ரோ 300 டாலர்கள் அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் எழத்தான் செய்கிறது.

இந்த விலைக்கும், போட்டோகிராஃபிக்குமான தொடர்பாக ஒரே புள்ளியில் நிற்பது இதன் ஏ13 பயோனிக் சிப் ஆகும். ஒரே நேரத்தில் 4 போன்களையும் இயக்கும் வகையிலும், ரெக்கார்ட் செய்யும் வகையிலும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்றது இந்த பயோனிக் சிப். இந்த ஐபோனை பயன்படுத்தி நீங்கள் நேரடியாக ஒரு படத்தை எடுக்க இயலும். அதற்காக ஃப்ள்மிக் என்ற ஒரு செயலியும் கூடவே கிடைக்கிறது.

சாம்சங் மற்றும் ஒன்ப்ளஸ் நிறுவனங்களும் கூடத்தான் மூன்று கேமராக்களை பின்பக்கம் கொண்டுள்ளது. ஆனால் அவையாவும் புகைப்படக்கலையை அடுத்த தரத்திற்கு எடுத்தும் செல்லும் வகையில் இல்லை. ஆனால் இந்த ஐபோனோ கம்யூடேசனல் போட்டோகிராஃபிக்காகவே உருவாக்கப்பட்டது.

இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக டீப் ஃபூஷன் டெக்னாலஜி (Deep Fusion technology) என்ற ஒரு தொழில்நுட்பமே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 9 புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். அதில் கிடைக்கும் டீடெய்ல்கள் மிகவும் துல்லியமானவை. டெக்‌ஷர்கள், ஷேட்கள் எல்லாமே அபாரம்.

ஷட்டர் பட்டனை அழுத்துவதற்கு முன்பாகவே 4 புகைப்படங்கள் ஒரு ஷாட்டின் போது எடுக்க்கப்படும். பின்னர் 5 புகைப்படங்கள் என்று வரும் போது அது லாங் எக்‌ஷ்போஷர் இமேஜாக துல்லியமாக வெளியாகும். இதன் மூலம் 24 மில்லியன் பிக்சல்கள் கொண்ட புகைப்படங்களை எடுக்க இயலும்.

சிலர் இப்படி கூறினாலும், சாஃப்ட்வேர் அப்கிரேட் வந்த பின்பு தான் முழுமையாக இது குறித்து நம்மால் கருத்து கூற இயலும். முழுக்க முழுக்க ப்ரொஃபஷ்னல்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் யாரும் வாங்கி புகைப்படங்களை எடுத்து மகிழலாம். குறிப்பாக இதில் இருக்கும் நைட் மோட் வேற லெவல். நீங்கள் இந்த செட்டிங்க்ஸை ஆன் செய்துவிட்டால் போதும், எப்போது சரவுண்டிங் வெளிச்சம் குறைவாக இருக்கிறதோ அப்போது ஆட்டோமேட்டிக்காக செயல்பட்டு சிறப்பான புகைப்படங்களை நமக்கு அளிக்கிறது.

2018ம் ஆண்டு வெளியான ஐபோன்களுக்கும் நேற்று முன்தினம் (செப்.10) வெளியான ஐபோன்களுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சென்ற முறையைக் காட்டிலும் இம்முறை வெளியான போன்களின் விலை கொஞ்ச்ம் குறைவாக இருக்கிறது. அல்லது அதற்கு நிகராக இருக்கிறது.

கடந்த முறை வெளியான போன்கள்

கடந்த ஆண்டு ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் XS Max போன்கள் கடந்த ஆண்டு வெளியானது.

இந்த ஆண்டு வெளியான போன்கள்

நேற்று முன்தினம் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போன்கள் வெளியானது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் XR போனின் அப்கிரேட் தான் ஐபோன் 11 என்பது குறிப்பிடத்தக்கது.

Apple iPhone 11 vs iPhone XR prices

ஐபோன் 11-ன் போனின் ஆரம்ப விலை ரூ. 64,900 (64 ஜிபி) மற்றும் 256 ஜிபி போனின் விலை ரூ. 69,900 மற்றும் 512 ஜிபி போனின் விலை ரூ. 79,900க்கு விற்பனையாக உள்ளது. கடந்த ஆண்டு வெளியான iPhone XR-ன் ஆரம்ப விலை இதன் ஆரம்ப விலையை விட மிக அதிமகாக இருந்தது. 64ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ.76,900 (தற்போது ரூ.49,000க்கு விற்பனையாகிறது). 128ஜிபி போன் ரூ.81,900 என்ற விலையில் அறிமுகமானது. தற்போது ரூ. 54,900க்கு விற்பனையாகிறது. 256ஜிபி ரேம் போன் ரூ. 91,900-க்கு அறிமுகமானது.

Apple iPhone 11 Pro vs iPhone XS prices

ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோவின் ஆரம்ப விலையே ரூ.99,900 ஆகும் (64ஜிபி வேரியண்ட்). 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ. 1,13,900. 512ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ. 1,31,900 ஆகும் . கடந்த ஆண்டு வெளியான XS விலையோடு இதை ஒப்பீடு செய்வோம் எனில், 64ஜிபி போன் எந்த ஒரு விலை மாற்றமும் இல்லாமல் ரூ.99,900க்கு விற்பனை செய்யப்பட்டது. 256ஜிபி ரேம் போன் ரூ.1,14,900-க்கு (ஆயிரம் ரூபாய் கூடுதலாக) விற்பனை செய்யப்பட்டது. 512ஜிபி போனின் விலை ரூ.1,34,000 என்று அறிவிக்கப்பட்டது.

Apple iPhone 11 Pro Max vs iPhone XS Max prices

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போனின் ஆரம்ப விலையே ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. 64ஜிபி போனின் விலை ரூ. 1,09,900 ஆகும். 256ஜிபி போனின் விலை ரூ. 1,23,900 மற்றும் 512ஜிபி போனின் விலை ரூ. 1,41,900 ஆகும். கடந்த வருடம் வெளியான XS Max போன்களின் விலை முறையே ரூ.1,09,900 (64ஜிபி), ரூ. 1,24,000 (256 ஜிபி) மற்றும் ரூ.1,44,900 (512ஜிபி) என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பர்ப்புள், மஞ்சள், பச்சை, கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் அந்த போன்கள் வெளியாகியுள்ளது.