டெக்னாலஜி வந்தாச்சு! சிங்கப்பூரில் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு சடுதியாகக் குறையப்போகும் துறை!

foreign worker jailed illegal money transfer
Photo: salary.sg Website

சிங்கப்பூரில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 86,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இதில் பெரும்பாலான மக்களுக்கான வாய்ப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரவு பகுப்பாய்வு மற்றும் மென்பொருள் உருவாக்கம் போன்ற புதியதொழில்நுட்பங்கள் தொழிலாளர்கள் தேவையை பெருமளவில் குறைக்கப்போகின்றன.  2019 தரவுகளின் அடிப்படையில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 86,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

லாஜிஸ்டிக்ஸ் துறையில் உள்ளூர் ஊழியர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கணிசமான விகிதத்தில் உள்ளனர். அதாவது 63.1 சதவிகிதம் என்று அறிக்கை குறிப்பிட்டது. பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட அனுபவம் மற்றும் நிபுணத்துவத்துடன் பணியாற்றும் இவர்களை வளர்ந்து வரும் தொழில்நுட்பம் பணி சூழலை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது.

சரக்கு ஆய்வாளர்கள், சரக்கு மேலாண்மை மேலாளர்கள் மற்றும் போக்குவரத்து நிர்வாகிகள் போன்ற  பதவிகளின் செயல்திறனை அதிகரிக்க தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.

ஆனால் கிடங்கு உதவியாளர்கள் போன்ற சில பதவிகள்,  மீண்டும் மீண்டும் செய்யும் பரிவர்த்தனை பணிகள் தொழில்நுட்ப வரவால் பாதிக்கப்படலாம்.

அத்தகைய வேலைகளில் உள்ள தொழிலாளர்களை மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வேறு பணிகளுக்கோ அல்லது வேறு துறைக்கோ மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.