லட்சுமி விலாஸ் வங்கி இனி DBS வங்கி கிளைகளாக செயல்படும்!

Lakshmi Vilas Bank Operate Branches As DBS Bank India
Lakshmi Vilas Bank to Operate Branches As DBS Bank India

லட்சுமி விலாஸ் வங்கியை (LVB) DBS வங்கி கையகப்படுத்த இந்திய அரசு நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

அதனை தொடர்ந்து, சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS குழுமம், லட்சுமி விலாஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.

சிங்கப்பூர் ராபின்சன்ஸ் கிளைகளில் 70% வரை அதிரடி “Black Friday” தள்ளுபடி விற்பனை!

இந்திய DBS வங்கி

இந்நிலையில், லட்சுமி விலாஸ் வங்கி கிளைகள் இன்று (நவம்பர் 27) முதல் இந்திய DBS வங்கியாக செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, லட்சுமி விலாஸ் வங்கி கணக்கு வைப்புகளில் இருந்து திரும்பப் பெறுவதற்கான முடக்கம் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

வங்கி கணக்கு

லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட்டர்கள் உட்பட வாடிக்கையாளர்கள் DBS வங்கி வாடிக்கையாளர்களாக தங்கள் கணக்குகளை இன்று நவம்பர் 27 முதல் தொடர் முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வழக்கம் போல் செயல்படும்

மேலும், இந்திய DBS வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் செயல்படுவதை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி, நிர்வாக பிரச்சனை மற்றும் நிதி நெருக்கடியால் மோசமான நிலைக்கு சென்ற காரணத்தால், LVB வங்கியை DBS வங்கியுடன் இணைக்க வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்மொழிந்தது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, சுமார் 2,500 கோடி ரூபாய் நிதியை DBS வங்கி மூலதனமாக கொண்டு செயல்படுகிறது.

வரும் வாரங்களில் முக்கிய விநியோக நிறுவன ஊழியர்களுக்கு COVID-19 சோதனை – MOH

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…