பிளீஸ்..! இனி நம்ம ஆட்கள் மேல் எப்படி மதிப்பு வரும்..? சிங்கப்பூரை திணறடிக்கும் லிட்டில் இந்தியா!

Photo: Little India

சிங்கப்பூரில் தன்னுடைய அனுபவம் எப்படி இருந்தது என்பது குறித்து, கிரி என்பர் கூறிய தகவல் இவை. நம்ம ஊரு ஆட்கள் எங்கே சென்றாலும் அவர்கள் பழக்கம் என்றைக்கும் மாறாது என்பதற்கு உதாரணமாக சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவை கூறலாம்.

மற்ற இடங்களில், இங்கு போல மோசமாக இருக்க மாட்டாங்க. சிங்கப்பூரிலேயே மிகவும் பழைமையான இடங்களில் லிட்டில் இந்தியாவும் ஒன்று என பெயர் வாங்கிய அளவுக்கு, கொஞ்சம் கெட்ட பெயரும் வாங்கி இருக்கு.

சிங்கப்பூரில் நாடு முழுவதும் சுத்தம், போக்குவரத்து விதிகள் பின்பற்றப்பட்டாலும் அவை எதுவுமே லிட்டில் இந்தியாவில்  கொஞ்சம் கூட பின்பற்றப்படுவதில்லை. அரசும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

அவரவர் இஷ்டத்திற்கு சாலையைக் கடந்து கொண்டு இருப்பார்கள்.  மற்ற நாட்டினர் லிட்டில் இந்தியாவிற்கு வந்தால், இங்கு எப்போதுமே இப்படித்தான் என்ற மனநிலையில் கடந்து செல்வார்கள். இவங்க எங்கே இருந்தாலும் இப்படி தான் போல என்று கிண்டலாக தான் நினைப்பார்கள். நம்மை பார்த்து, இங்கே புதிதாக வருபவர்களும் சாலை விதிகளை மதிப்பதில்லை. கண்ட இடங்களில் எச்சில் துப்பி வைத்து இருப்பார்கள்.

இந்த பழக்கத்தை இன்னும் விடாமல் இருக்காங்க. இந்தியர்கள் அனைவரும், அதில் பெரும்பாலும் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தினர் கூடும் இடம் இங்கே தான். இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான இடம் என்பதால், விடுமுறை நாளில் பொருட்கள் வாங்க இங்கே பெரிய கூட்டம் குவியும்.

லிட்டில் இந்தியாவில் நீங்கள் இருக்கும் போது, வேறு ஒரு நாட்டில் இருக்கும் உணர்வே உங்களுக்கு இருக்காது. நம்ம ஊர் வீதிகளில் சுற்றி கொண்டு இருப்பது போலவே இருக்கும். எங்கு பார்த்தாலும் நம்மவர்களே இருப்பார்கள்.

லிட்டில் இந்தியா வந்த தொழிலாளர்களுக்கு, அவர்கள் இருக்கும் டாமிட்ரி செல்ல இங்கேயே பேருந்து இருக்கும். இதில் கட்டணம் செலுத்தி சென்று கொள்ளலாம்.எல்லா வசதிகள் இருந்தும் முறையாக நடந்துகொண்டால், இன்னும் நம் மீது மதிப்பு கூடும்.