“லண்டன், சிங்கப்பூர் இடையே விமான சேவை”- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு!

COVID-19: SIA Group reports 60% decline in passenger carriage

சிங்கப்பூர் அரசு, அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், பிரிட்டன், நெதர்லாந்து, தென்கொரியா உள்ளிட்ட 11 நாடுகளுக்கு, கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தின் கீழ் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அரசு அனுமதித்துள்ள நாடுகளுக்கு அதிகளவில் விமானங்களை இயக்க சிங்கப்பூரின் மிகப்பெரிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிங்கப்பூரில் 23 வயது ஆடவர் உட்பட கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 15 பேர் உயிரிழப்பு

மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கான விமான போக்குவரத்து தொடர்பான அட்டவணையையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்கள் நிறுவனத்தின் A380 ரக விமானங்கள் நடப்பாண்டு நவம்பர் மாதம் 18- ஆம் தேதியில் இருந்து மீண்டும் விமான சேவையைத் தொடங்குகிறது.

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் கீழ் (Vaccinated Travel Lanes- ‘VTLs’), லண்டன் மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் இடைநில்லா எனப்படும் நேரடி விமான சேவை தொடங்கப்படும். SQ322 என்ற விமானம் சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கும், SQ317 என்ற விமானம் லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுத்தம், தரம் குறித்து எழுந்த புகார் – கவனம் செலுத்தும் நிறுவனம்

இதில் SQ317 என்ற விமானம் மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப்பாதை திட்டத்தின் கீழ், லண்டன்- சிங்கப்பூர் (London- Singapore) இடையே தினந்தோறும் விமானங்கள் இயக்கப்படும். இந்த விமான சேவை வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று முதல் தொடங்குகிறது.” இவ்வாறு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமான A380 ஏர்பஸ் (Airbus A380-800) சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு SQ322 என்ற சேவையில் பயணத்தைத் தொடங்குகிறது. அதேபோல், அதேவிமானம் லண்டனில் இருந்து SQ317 என்ற சேவையில் சிங்கப்பூருக்கு வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற விமானங்கள் பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர் (United Kingdom and Singapore) இடையே கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களுக்காக (non-VTLs) இயக்கப்படுகிறது.

புதிய பேருந்து நிறுத்தம் தொடர்பான எஸ்பிஎஸ் போக்குவரத்து நிறுவனத்தின் அறிவிப்பு!

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/sg/travel-info/vaccinated-travel-lanes/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.