ஆயிரக்கணக்கானவர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது Facebook… தொடரும் பணிநீக்கம் – கலக்கத்தில் சாதாரண ஊழியர்கள்

meta-facebook-layoff

Meta Platforms Inc. நிறுவனம் தனது 87,000 ஊழியர்களில் ஆயிரக்கணக்கானவர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நிறுவனம் தொடங்கியதில் இருந்து 18 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் பெரிய அளவிலான ஆட்குறைப்பு ஆகும்.

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக தமிழகத்தில் நடக்கும் மோசடி – “எல்லாமே பெர்பெக்ட்’ஆ இருந்துச்சி” – ஏமாந்தவர் கண்ணீர்

இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி நிலவரப்பபடி, சுமார் 87,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிவதாக Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டரின் சமீபத்திய ஆட்குறைப்பை தொடர்ந்து இது மேற்கொள்ளப்படுகிறது. அங்கு 7,500 வேலைகளில் 3,700 வேலைகள் பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Meta நிறுவனத்தின் ஆட்குறைப்பு என்பது சதவீத அடிப்படையில் ட்விட்டரை விட சிறியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

“சிங்கப்பூரின் அரசியல் தவறாகப் போனால் நிர்வாகம், மக்கள் வாழ்வும் தவறாக போய்விடும்” – பிரதமர் லீ