அதிக விமானக் கட்டணங்களால் தமிழர்கள் அவதி: “சிங்கப்பூர் to தமிழ்நாடு நேரடி விமானம் வேண்டும்”

(Photo: India in Singapore/ Twitter)

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பான கடிதம் ஒன்றை, இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு

அந்த இரு நாடுகளுடன் இந்த தொற்றுநோய் காலத்தில் விமான போக்குவரத்துக்கான ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“இதுபோன்ற ஒப்பந்தம் இல்லாத காரணத்தால் அந்நாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு பயணம் செய்ய என்னும் நேரங்களில் நேரடி விமானங்கள் செயல்படுவதில்லை.”

நேரடி விமான சேவை இல்லாத காரணத்தால், தமிழர்கள் பல்வேறு பகுதிகளை அதாவது துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் செய்துவர வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் அதிக விமானக் கட்டணங்களையும் அவர்கள் செலுத்த வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது.

மேலும் இதனால் அவர்களுக்கு கடும் சிரமம் மற்றும் நிதி சுமை ஏற்படுவதாக முதல்வர் கூறினார்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை’- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!