இன்னும் பயங்கரமா இருக்கும்! – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர் நாணய ஆணையம்

(Photo: TODAY)

சிங்கப்பூரில் பணவீக்கம் கிடுகிடுவென உயர்வதால் மக்கள்,நிறுவனங்கள் மற்றும் நிதி அமைப்புகள் அனைத்தும் சவாலான பொருளாதாரச் சூழலை எதிர்கொள்ள நேரிடும்.எனவே, அவற்றைச் சமாளிக்க தயாராக வேண்டும் என்று MAS தெரிவித்துள்ளது.

ஆணையம் அதன் பொருளாதார நிலைத்தன்மை மறுஆய்வில் அதனைத் தெரிவித்தது.பெரும்பாலான நிறுவனங்கள் வருமானம், வர்த்தகச் செலவு, வட்டி விகிதம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உலகளாவிய நிலையில் கடுமையாகும் நிதி நிலவரம், உயரும் பணவீக்கம், மெதுவடையும் வளர்ச்சி ஆகியவை தீவிரமாக இருப்பதாக குறிப்பிட்டது.பொருளியல் அபாயங்களைக் கட்டுப்படுத்த போதுமான முன்னேற்பாடுகள் உள்ளூர் நிறுவனங்களுக்கு இருப்பதாகவும் ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் பெரும்பாலானோர் வீட்டுக்கடன்கள் அதிகமாக வாங்கி செலவை உயர்த்தியிருப்பதால் அவையும் சிரமத்தை எதிர்நோக்கலாம். ஆனால் வட்டிவிகித்தத்தைச் சமாளிக்கும் திறனைப் பெரும்பாலான குடும்பங்கள் பெற்றிருப்பதுபோல் தெரிவதாக ஆணையம் கூறியது.

வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் முதலியவை கடன் ஆபத்து குறித்து கவனமாக இருக்கவேண்டுமென்று ஆணையம் ஆலோசனை வழங்கியது.