சிங்கப்பூரின் ‘PayNow’ செயலி இந்தியாவின் ‘UPI’ செயலியுடன் இணையவுள்ளது!

File Photo

உலகில் நொடிக்கு நொடி தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், ரொக்கமில்லா பணபரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வங்கி சார்பிலும் தங்களது வாடிக்கையாளர்கள் ரொக்கமில்லா பணபரிவர்த்தனை மேற்கொள்ள வசதியாக ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமது நாட்டு குடிமக்களுக்கு ஜப்பான் அரசு அறிவுறுத்தல்!

அதேசமயம், Google Pay, PhonePe, PayTM, BHIM உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆண்ட்ராய்டு செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது, இந்த செயலிகளை இந்திய மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, Google Pay செயலியை உலகில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரின் ‘PayNow’, இந்தியாவின் ‘UPI’ ஆகிய கட்டணச் செயலிகளுக்கு இடையே அடுத்த ஆண்டு புதிய இணைப்பு உருவாக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India- ‘RBI’) மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் (Monetary Authority of Singapore- ‘MAS’) அறிவித்துள்ளனர். யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (‘Unified Payments Interface’- UPI) மற்றும் PayNow ஆகியவை உடனடி குறைந்த விலையில் எல்லை தாண்டிய பணப்பரிமாற்றத்தை எளிதாக்கும். இந்த இணைப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் செயல்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘PayNow’ – ‘UPI’ இணைப்பின் மூலம் பயனீட்டாளர்கள் உடனுக்குடன், எளிதாக, குறைந்த கட்டணத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இணையப் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். ‘PayNow’- ‘UPI’ இணைப்பு திட்டம் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

“எத்தனை பேர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை?”- நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

‘NPCI’ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (NIPL) மற்றும் நெட்வொர்க் ஃபார் எலக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர்ஸ் (Network for Electronic Transfers- ‘NETS’) ஆகியவற்றின் முந்தைய முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இணைப்பு இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே அட்டைகள் மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி எல்லைகளுக்கு இடையேயான பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. மேலும் வர்த்தகம், பயணம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவிலும், சிங்கப்பூரிலும் உள்ள வர்த்தகங்களுக்கிடையே பணப் பரிவர்த்தனை சுலபமாக, சிக்கலின்றி நடக்க ‘PayNow’- ‘UPI’ இணைப்பு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘UPI’ என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான, ‘ஃபாஸ்ட் பேமெண்ட்’ (Fast Payment) அமைப்பாகும். இது வாடிக்கையாளரால் உருவாக்கப்பட்ட ‘VPA’- ஐப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக பணம் செலுத்த உதவுகிறது.