FORBES-இன் பட்டியலில் இடம்பிடித்த ‘ROLEX’ – 200 நிறுவனங்களில் சிங்கப்பூரின் 7 நிறுவனங்கள்

Photo: Forbes
ஒவ்வொரு வருடமும் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஒரு பில்லியன் டாலருக்குக் கீழ் விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலை ‘Forbes’ தரவரிசைப்படுத்தி வெளியிடும்.
ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று அதன் இணையதளத்தில் வெளியான பட்டியலில் சிங்கப்பூரைச் சேர்ந்த 7 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.ஆடம்பரக் கைக் கடிகாரங்களை விற்பனை செய்யும் “The hour glass” மற்றும் “UMS Holdings” ஆகிய சிங்கப்பூர் நிறுவனங்களும் இவற்றுள் அடங்கும்.

 

“UMS Holdings” நிறுவனம் துல்லியமான மின்கடத்திகளை தயாரித்தல்,தரக்கட்டுப்பாடுகள் போன்றவற்றுடன் எண்ணெய்-எரிவாயுத் துறை,விமானத்துறை ஆகியவற்றில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு வர்த்தகச் சேவை வழங்கி வருகிறது.

 

“The hour glass” நிறுவனம் ‘ROLEX’ போன்ற ஆடம்பர கைக் கடிகாரங்களை சிங்கப்பூரில் விற்பனை செய்து வருகிறது.

 

ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்வு,கடன்,விற்பனை,பங்குகள் மூலம் ஈட்டப்படும் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டதாக ‘FORBES ASIA’ கூறியது.