சிங்கப்பூரில் 500 ஊழியர்களைக் குறைக்க உள்ள ஷெல் நிறுவனம்

Shell Singapore to cut 500 jobs in next three years
Shell Singapore to cut 500 jobs in next three years (PHOTO: REUTERS/Edgar Su)

அடுத்த மூன்று ஆண்டுகளில் ராயல் டச் ஷெல் (Royal Dutch Shell) நிறுவனம், புக்கோம் தீவில் 500 ஊழியர்களைக் குறைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அந்த நிறுவனம் கச்சா எண்ணெயிலிருந்து குறைந்த கார்பன் ஸ்லேட் எரிபொருளை கையாள இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு 412 ஊழியர்கள் வருகை.

ஷெல் சிங்கப்பூர், 1,300 பேர் கொண்ட புக்கோம் ஊழியர்களை 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,100ஆகக் குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.

கூடுதலாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 300 பேர் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள் என்று அது கூறியுள்ளது.

அந்த ஆலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 500,000 பிப்பாய்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சுத்திகரிக்கப்படும் அளவை 250,000 பீப்பாய்களாக நிறுவனம் குறைக்கும் என்றும் திட்டம் தீட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அடுத்த ஒன்று அல்லது 2 ஆண்டுகளில் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று ஷெல் நிறுவன தலைவர் ஆவ் கா பெங் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை; நவம்பர் 17 முதல் அமல்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் விமானங்களின் அப்டேட்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…