சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 2022-23 ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருவாய் மற்றும் லாபத்தில் சாதனை படைத்துள்ளது.

கொரோனா தாக்கத்துக்கு பிறகு கடந்த 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எல்லை திறக்கப்பட்டது. அதன் பிறகு விமான போக்குவரத்து உச்சத்தை எட்டியது.

இந்த ஆண்டு மார்ச் 31 இல் முடிவடைந்த நிதி ஆண்டில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் S$17.78 பில்லியன் என்ற சாதனை வருவாயைப் பெற்றுள்ளது.

இந்த வருவாய் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, S$7.62 பில்லியன் இருந்தது. அதாவது சுமார் 133 சதவீத வருவாய் தற்போது அதிகரித்துள்ளது.

மேலும், இந்நிறுவனம் S$2.16 பில்லியன் நிகர லாபத்தையும் ஈட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் S$962 மில்லியன் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தன் 76 ஆண்டுகால வரலாற்றில் அதிக நிகர லாபத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது SIA.