இந்தியா-சிங்கப்பூர் பயணிகள் வணிக விமான சேவை: நெருக்கமாகப் பணியாற்றி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

singapore air-ticket-prices-up-departing-flights
Pic: File/Reuters

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே திட்டமிடப்பட்ட பயணிகள் வணிக விமானங்களை (scheduled commercial flights) மீண்டும் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) வரவேற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே திட்டமிடப்பட்ட பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் SIA நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.

சிங்கப்பூரின் VTL பயண ஏற்பாடு என்றால் என்ன? – விவரம்

மேலும், வாடிக்கையாளர்களின் புரிதலுக்கும் நன்றி கூறுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது இணையதளத்தில் கூறியுள்ளது.

மேலும், விமான அட்டவணைகள் பற்றிய தகவல் கிடைத்ததற்கு பின்னர் கூடுதல் தகவலைப் பகிர்ந்துகொள்வோம் எனவும் அது கூறியுள்ளது.

அதில் VTL பயண திட்ட விமானங்களின் அட்டவணையும் அடங்கும் என்றும் SIA கூறியுள்ளது.

இந்தியா

சிங்கப்பூர் – இந்தியா இடையிலான VTL சிறப்பு பயணம் வரும் நவம்பர் 29 அன்று இந்தியாவின் முக்கிய மூன்று நகரங்களிலிருந்து ஆறு நியமிக்கப்பட்ட தினசரி விமானங்களுடன் தொடங்கும்.

சென்னை

அதாவது சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய முக்கிய மூன்று நகரங்களிலிருந்து அந்த சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசி சான்றுகள் – VTP போர்ட்டலில் எதைப் பதிவேற்றலாம்?