விமானங்களை விற்றும், குத்தகைக்கு விட்டும் நிதி ஈட்டிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்

(Photo: SIA/FB)

இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீளும் ஒரு முயற்சியாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதனுடைய சில விமானங்களை விற்றும், குத்தகைக்கு விட்டும் நிதி பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 11 விமானங்களை விற்றுள்ளது அல்லது குத்தகைக்கு விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு ஊழியர்களின் நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்வு தற்காலிக நிறுத்தம்

இதன் மூலமாக அந்நிறுவனம் சுமார் S$2 பில்லியன் திரட்டியதாகக் கூறியுள்ளது.

கேத்தே பசிபிக் ஏர்வேஸ் லிமிடெட் மற்றும் குவாண்டாஸ் ஏர்வேஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் இந்த தொற்றுநோய் சூழலில் இதே போன்ற ஒப்பந்தங்களைச் செய்துள்ளன.

கடந்த முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகளின் எண்ணிக்கை 99.6% சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருணை அடிப்படையில் எல்லை தாண்டிய பயணத் திட்டம்!