சிங்கப்பூரில் வங்கி கணக்கு உடையவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கு தான்!

dbs-ocbc-uob-money-lock-scam-protect
(Photo: Asiaone)

பல வங்கிக் கணக்குகளைக் கொண்டவர்கள், அப்டேட்களை பெற பல தளங்களில் உள்நுழைவது போன்ற நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

ஆனால் தற்போது, தேசிய டிஜிட்டல் அடையாள அமைப்பான SingPassஇன் உதவியுடன் ஒரே தளத்தில் இது சாத்தியமாகும்.

சிங்கப்பூரில், பறவைக்கு உணவளித்த ஆடவர் – NParks விசாரணை!

தங்களுடைய நிதி சம்மந்தப்பட்ட நிலவரங்களை, பல்வேறு வங்கி கணக்குகளை கொண்ட நபர்கள், ஒரே தளத்தில் இனி பார்வையிடலாம்.

வெளிப்படையான ஒப்புதல் அளிப்பதன் மூலம், பயனர்கள் தங்களது நிதித் தரவுகள் அனைத்தையும் தங்களுக்கு விருப்பமான ஒரே தளத்தில் பார்வையிடலாம்.

அதாவது, கணக்கு நிலுவைகள், கிரெடிட் கார்டுகள், கடன்கள் மற்றும் முதலீடுகள் – பல்வேறு வங்கிகள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் தொடர்பானவை அனைத்தையும் அவர்கள் விரும்பும் தளத்தில் காணலாம்.

SGFinDex என்பது நிதித்துறையுடன் இணைந்து, சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) மற்றும் ஸ்மார்ட் நேஷன் மற்றும் டிஜிட்டல் அரசு குழு (SNDGG) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

தற்போது இதில், Citibank, POSB மற்றும் DBS வங்கி, HSBC, Maybank, OCBC, Standard Chartered வங்கி மற்றும் UOB ஆகிய ஏழு வங்கிகள் பங்கேற்கின்றன.

தொடர்ந்து இது போன்று தகவல்களை பெற எங்களுடன் இணைந்து இருங்கள்.

COVID-19 தடுப்பூசி மருந்துக்காக தனது விமானத்தை தயார் செய்யும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, கார் மோதல் – 22 பேர் மருத்துவமனையில்..

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…