சிங்கப்பூரில் எண்ணெய் சாராத ஏற்றுமதி வளர்ச்சி அடையும்…!

(PHOTO: Reuters)

சிங்கப்பூரில் எண்ணெய் சாராத ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், 0-2 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று Enterprise Singapore கணித்துள்ளது.

அதாவது நாட்டின் மொத்த ஏற்றுமதி 2-4 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்றும் கணித்து கூறப்பட்டுள்ளது. இது 1-3 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று கடந்த நவம்பரில் கணிக்கப்பட்டது.

காவல்துறையின் ரகசிய தகவல்களை பகிர்ந்த ஊழியர் கைது

கடந்த 2020ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 0.5 சதவீதம் வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. அது 3ஆம் காலாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சி கண்டது.

கடந்த முழு ஆண்டு நிலவரப்படி, எண்ணெய் சாராத ஏற்றுமதி 4.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை, திருச்சியிலிருந்து சிங்கப்பூர் பறக்க… முன்பதிவு தொடக்கம்