சிங்கப்பூர்-சீனா ஒத்துழைப்பு; உலக வர்த்தகம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த பிரதமர் லீ!

pm lee said conflict us china relations strained due to russia ukraine war asia pacific

உலக நாடுகளுக்கிடையேயான வர்த்தகமானது ஒளிவு மறைவில்லாத விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் லீ கூறினார்.புதிய வர்த்தக விதிமுறைகளை மேம்படுத்துவதற்கான தேவை இருப்பதாகவும் கூறினார்.மேலும்,நாடுகள் இப்போதைய விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 29-வது பொருளாதார தலைவர்கள் மாநாடு முடிந்த பின்னர் பிரதமர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.ஆசிய பசிபிக் முழுவதும் தாராள வர்த்தக மண்டலம் உருவாவதற்கு மிக நீண்ட காலம் ஆகும் என்று கூறினார்.

இருப்பினும் தாராள வர்த்தகச் சூழல் இலக்கை நோக்கி ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று திரு.லீ தெரிவித்தார்.நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்குத் தேவையான விதிமுறைகள் குறித்து நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடத்துவது முக்கியமானது என்றும் பரிந்துரைத்தார்.

சிங்கப்பூர்-சீனா இடையே நல்லுறவு மேம்பட்டு வந்தால்,நம்பிக்கையை வலுப்படுத்தி வந்தால் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்பு மிக அதிகம் என்று தெரிவித்தார்.