சிங்கப்பூரில் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் -0.3 சதவீதம் சரிவு

(PHOTO: Reuters)

சிங்கப்பூரில் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் -0.3 சதவீதம் குறைந்துள்ளது.

நுகர்வோர் விலைகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் குறைந்தது. முக்கியமாக சேவை செலவுகளில் பெரிய சரிவு ஏற்பட்டது.

சிங்கப்பூரில் மேலும் 44 பேருக்கு இன்று பாதிப்பு!

மேலும், உணவுத்துறையில் பணவீக்கம் காரணமாகவும் அது குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தின் -0.1 சதவீதமாக இருந்தது, இதனை ​​சிங்கப்பூர் நாணய வாரியம் (MAS) மற்றும் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் (MTI) ஆகியவற்றின் தகவல்கள் (ஜன, 25) குறிப்பிட்டுள்ளன.

ஒட்டுமொத்த பணவீக்கம் டிசம்பரில் 0 சதவீதமாக இருந்தது, இது நவம்பர் மாதத்தில் -0.1 சதவீதம் பதிவானது.

முக்கியமாக தனியார் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததன் காரணமாக அதில் சரிவு ஏற்பட்டது.

2020ஆம் ஆண்டில், பணவீக்கம் மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் -0.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட அரியவகை காட்சி!