சிங்கப்பூரில் தங்கத்தின் மதிப்பை உணரும் வாடிக்கையாளர்கள்! – உலகத் தங்க மன்றத்தின் புள்ளிவிவரம்

Couple cheating arrest TamilNadu
உலகத் தங்க மன்றம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி,சிங்கப்பூரில் வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்குவது அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் 43 சதவீதம் உயர்ந்து சுமார் 3.8 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது.கடந்த 2021-ன் இரண்டாவது காலாண்டில் 2.7 டன் விற்பனையானது குறிப்பிடத்தக்கதாகும்.

தங்க நகைக்கான தேவை அதிகரித்ததும் தங்கக் காசுகள்,தங்கக் கட்டிகள் போன்றவற்றின் மீது வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டியதும் வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என்று உலகத் தங்க மன்றம் தெரிவித்தது.
தங்க நகைகளுக்கான தேவை 2021-ன் இரண்டாவது காலாண்டில் 1.7 டன்னாக இருந்தது.ஆனால் இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் தங்கத்திற்கான தேவை 2.4 டன்னாக அதிகரித்துள்ளது.

கோவிட்-19 தொற்று பரவலுக்கு பின்னர் சிக்கலான நிலையின் போது தங்கம் பாதுகாப்பு அளிக்கக்கூடிய சொத்து என்பதை பெரும்பாலானோர் உணர்ந்ததாக லிட்டில் இந்தியாவில் நகைக்கடையை நடத்திவரும் உரிமையாளர் தெரிவித்தார்.
தங்கத்தை எப்போதும் வாங்கலாம்,விற்கலாம்,அதற்கான சந்தை எப்போதும் இருக்கும்.எனவே,தங்கம் நிலையானது என்று அவர் கூறினார்.