லட்சுமி விலாஸ் வங்கியை DBS வங்கியுடன் இணைக்கத் திட்டம்!

Singapore DBS India Lakshmi villas
DBS Bank

லட்சுமி விலாஸ் வங்கி, நிர்வாக பிரச்சனை மற்றும் நிதி நெருக்கடியால் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக ஊடக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில், லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் இந்திய DBS வங்கியுடன் இணைக்க வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர் இருவர் கைது

இதன் தொடர்பான கருத்துகளையும் ரிசர்வ் வங்கி வரவேற்றுள்ளது, மேலும் நாளை நவம்பர் 20ஆம் தேதிக்குள் இதன் தொடர்பான கருத்து அல்லது ஆலோசனைகளை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

அதிகபட்ச எடுப்பு

இந்நினையில், வங்கி வாடிக்கையாளர்களின் முதலீடு மற்றும் சேமிப்புகளை பாதுகாக்கும் நோக்கில், அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்று இந்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

அதாவது, அனைத்து சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளில் இருந்து, கடந்த நவம்பர் 17 முதல், அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை அந்த அதிகபட்ச தொகையை எடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்களும் முதலீட்டாளர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

DBS வங்கி

அது ஒருபுறம் இருந்தாலும் இந்த DBS வங்கியின் இணைப்பு வரைவு, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, அதன் வளர்ச்சிக்காக சுமார் 2,500 கோடி ரூபாய் நிதியை DBS வங்கி மூலதனமாக கொண்டு வரும் எனத் தெரிவித்துள்ளது.

நிதி நிலை

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வங்கிகளில் DBS வங்கியும் ஒன்று. அதன் இந்திய கிளைகளின் நிதி நிலை பொறுத்தவரை மிகவும் வலிமையாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஆகையால், DBS வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கி இணைப்பதன் மூலம் இரண்டு வர்த்தக அமைப்பிற்கும் பெரிய அளவிலான லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் பயங்கர மோட்டார் சைக்கிள் விபத்து…தகவல் வேண்டி பதிவிட்ட குடும்பம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…