நம்பிக்கையில் சிங்கப்பூர் வணிகர்கள்! – விலைவாசி உயர்வினால் கவலையுடன் உள்ள நுகர்வோர்கள்

சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து சில்லறை வர்த்தகத்தின் வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.ஆனால்,அதிகரித்து வரும் பணவீக்கத்தால் விலைவாசி உயர்வு போன்ற தாக்கங்கள் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ளது.எனவே,சிங்கப்பூர் நுகர்வோர்கள் செலவு செய்வதற்கு முன்பு ஒன்றுக்குப் பலமுறை யோசிக்கின்றனர்.சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

 

சுமார் 570 பேர் ஆய்வில் பங்கெடுத்தனர்.செலவினங்களைச் சமாளிக்க முடியுமா என்ற கவலை வர்த்தகர்களிடையே இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.57 சதவீதத்தினர் பெருந்தொற்றுக்கு முன்பு செலவு செய்ததைப் போல அல்லது அதைவிட அதிகமாக செலவு செய்ய எதிர்பார்ப்பதாகக் கூறினர்.65 சதவீதத்தினர் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றின் காரணமாக கண்மூடித்தனமாக செலவு செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

 

45 சதவீத மக்கள் விலைவாசி தொடர்ந்து உயர்ந்தால்,செலவுகளைக் குறைத்துக் கொள்வது குறித்து பரிசீலனை செய்யப்போவதாக கூறியிருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.நுகர்வோர்களின் கவலை ஒருபுறம் இருக்க,வர்த்தகர்கள் வருடாந்திர வருமானம் பெருந்தொற்றுக்கு முன்பிருந்ததைவிட அதிகமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

 

தொடர்ந்து மூன்று மாதங்களாக சில்லறை வர்த்தகத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.