உலகில் மிக வேகமான அகண்ட அலைவரிசை வேகத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூர்!

foreign worker train chased assistant station manager fined jailed
Photo: todayonline

உலகில் மிக வேகமான அகண்ட அலைவரிசை வேகத்தை சிங்கப்பூர் கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இணையத் தொடர்பு மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட டிஜிட்டல் வாழ்க்கை தர குறியீட்டில் சிங்கப்பூர் உலகளவில் ஆறாவது இடத்தில் உள்ளது. இணையத் தொடர்பு, இணையதளம் மூலம் டிஜிட்டல் முறையில் அரசாங்க சேவைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதில் உலகில் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது சிங்கப்பூர்.

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது சிங்கப்பூர்!

ஐக்கிய நாடுகள், உலக வங்கி, இதர சில அமைப்புகள் ஆகியவை வெளியிடும் புள்ளி விவரங்களைக் கொண்டு ‘சர்ஃப்ஷார்க்’ நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. இந்த நிறுவனம் நெட்வொர்க் சேவையை வழங்கி வருகிறது. இவை ஒரு நாட்டின் இண்டர்நெட் மலிவு மற்றும் தரம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் அரசு துறைகளில் மின்னணு முறை, அதன் சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் 110 நாடுகள் பங்கேற்றன.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறியீட்டில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்தது. தென்கொரியா, பின்லாந்து, இஸ்ரேல், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. இந்த பட்டியலில் சிங்கப்பூர் ஆறாவது இடத்தில உள்ளது.

அரசின் மின்னணு சேவையில் அதன் சிறந்த செயல்திறன் அளவீடுகளில் ஒன்றாக இருந்தாலும், வழங்கப்பட்ட ஆன்லைன் சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தத் தயாராக இருப்பதன் அடிப்படையில் சிங்கப்பூர் முதல் இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதில் முதல் இடத்திற்கு அமெரிக்கா முன்னேறியது.

வீட்டில் இருந்தவாறு கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடையும் திட்டம்… திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதிப் பெறுவர்?

இணைய தரத்தில் சிங்கப்பூர் உலக அளவில் 13- வது இடத்தில் உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு தரவரிசைப்படுத்தப்படாத தென் கொரியா, இணைய தரத்தில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கண்டுள்ளதால், வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரை மிஞ்சும் என்று ஆய்வு கூறுகிறது.

அதிவேக மொபைல் இணையத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் 9 இடங்கள் சரிந்து 17- வது இடத்தைப் பிடித்தது. இணையத் தரம் நேரடியாக டிஜிட்டல் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது. இது வேலை செயல்திறனை அதிகரிக்கிறது மற்றும் சிறந்த தகவல் தொடர்புக்கு உதவுகிறது.