‘StarHub’ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo: StarHub

 

‘StarHub’ நிறுவனம் நேற்று (23/07/2021) வெளியிட்ட அறிவிப்பில், “திருடப்பட்ட படங்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பும் செட்-டாப் பாக்ஸ் (Set-top box) எனும் ஒளிவழித் தெரிவு பாக்ஸைத் திருப்பி தரும் வாடிக்கையாளர்களுக்கு 120 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள StarHub TV+ பாக்ஸுக்கான (StarHub TV+ Box) வாடகையை இரண்டு ஆண்டுக்கு தள்ளுபடி செய்யப்படும்.

திருடப்பட்ட படங்களையும், நிகழ்ச்சிகளையும் பார்க்க உதவும் செட்-டாப்- பாக்ஸை விற்கும் நிறுவனங்களுக்கு விரைவில் அபராதம் விதிக்கப்படலாம். இது நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே, சட்டப்பூர்வமான வழிகளில் படங்களையும், நிகழ்ச்சிகளையும் பார்ப்பதை இந்த அறிவிப்பு ஊக்குவிக்கும்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்சேஞ் செய்யும் வாடிக்கையாளர்கள் (Exchange Customers) ‘StarHub TV’+ பாக்ஸுக்கான (StarHub TV+ Box) இரண்டு ஆண்டுகள் வாடகை தள்ளுபடி செய்யப்படும். இது பிளக்-அண்ட்-பிளே ஆண்ட்ராய்டு டிவியை (Plug-and-Play Android TV) அடிப்படையாகக் கொண்ட மீடியா பிளேயர். மேலும், அல்ட்ரா ஹெச்டி 4 கே (Ultra HD 4K) மற்றும் வைஃபை இணைப்பு (Fast Wi-Fi connectivity) போன்ற வசதிகளும் உள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பரவல்..தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டும் மூத்தோர்கள்.!

ஜூலை 24- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை பிளாசா சிங்காபுரா (Plaza Singapura), டாம்பைன்ஸ் மால் (Tampines Mall) மற்றும் ஜூரோங் பாயிண்ட் (Jurong Point) ஆகிய இடங்களில் உள்ள ‘StarHub’ கிளைகள் உள்ளிட்ட 8 விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் செட்-டாப் பாக்ஸை இலவசமாக, பாதுகாப்பாக விட்டு செல்லலாம்.

இந்த பாக்ஸுகள் பொறுப்பான மற்றும் நிலையான முறையில் அப்புறப்படுத்துவதை உறுதிச் செய்வதற்காக மின்கழிவு மறு சுழற்சி நிறுவனம் (Reputable e-waste recycler) ஒன்றுடன் இணைந்துள்ளதாக ‘StarHub’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதிப்புரிமை மசோதாவின் (Copyright Bill) கீழ், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், திருட்டு உள்ளடக்கத்தை அணுகக்கூடிய செட்-டாப் பாக்ஸை விற்பனை செய்வது சட்டவிரோதமானதாகக் கருதப்படும். இந்த நிலையில், ‘StarHub’ நிறுவனம் இத்தகைய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.