லிட்டில் இந்தியாவில் உள்ள தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ நிறுவனத்தின் மீது சரமாரி புகார் – பொருளை அனுப்பிட்டு வருடக்கணக்கில் காத்திருக்கும் ஊழியர்கள் ஆதங்கம்

Stomp

லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ & லாஜிஸ்டிக்ஸ் பலரிடம் பொருட்களை பெற்று அதனை வருடக்கணக்கில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்காமல் இருப்பதாக எழுந்த புகார் குறித்து நாம் முன்னர் பதிவிட்டோம்.

அதன் எதிரொலியாக சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பொருட்களை அனுப்பாமல் இழுத்தடிக்கும் அந்நிறுவனம் மீது 72 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில் ஒன்று, சிங்கப்பூரில் தான் வாங்கிய TVயை இந்தியாவுக்கு அனுப்ப S$500 செலவளித்துள்ளார் ஊழியர் ஒருவர். ஆனால் 15 மாதங்களுக்கு மேலாகியும் TV போய் சேர்ந்த பாடில்லை.

இதுகுறித்து அவர் விசாரித்தபோது, ​​கார்கோ நிறுவனம் சாக்குப்போக்கு கூறி டெலிவரிக்கான நேரத்தை நீட்டித்துள்ளது. ஒருகட்டத்தில் நிறுவனம் அவருக்கு பதிலளிக்கவில்லைம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரி ஒருவேலை போய் சேருவதில் கப்பல் விவகாரத்தில் ஏதும் தாமதம் உள்ளதா என்று பார்த்தால் அதிலும் எந்த பாதிப்பும் இல்லை.

கட்டுமான தளத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்த வெளிநாட்டு ஊழியர் – நலமுடன் இருப்பதாக கூறும் நிறுவனம்

ஏனெனில், மற்றொரு கார்கோ நிறுவனத்திடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டார் கார்கோ & லாஜிஸ்டிக்ஸ் உரிமையாளர் திரு ஹமீத் சுல்தான் யூசுப் அலி கூறுகையில்: “கடந்த ஆறு மாதங்களாக, நாங்கள் எங்கள் பொருட்களை 30 நாட்களுக்குள் டெலிவரி செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூர் சட்டத்தின் படி, குறிப்பிட்ட கால அவகாசம் சொல்லி கட்டணம் வசூலித்து, பொருளை அந்த கால கட்டத்துக்குள் அனுப்பாமல் இருப்பது குற்றமாகும்.

இதனை சரிக்கட்ட வேண்டும் என்று அந்நிறுவனத்திற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு அந்த தமிழன் நிறுவனத்திடம் ஏதேனும் அனுபவம் இருந்தால் கமெண்டில் தெரிவியுங்கள்.

சிங்கப்பூர் to இந்தியா… பொருள் அனுப்பிய ஊழியர்: கார்கோ கட்டணம் S$500 – 15 மாதங்களுக்கு மேலாகியும் பொருள் போய் சேரல.. போலீசில் புகார்